பட வாய்ப்பு இதனால் கிடைக்கவில்லை.. தங்கலான் பட நடிகை பார்வதி வருத்தம்
பார்வதி திருவோத்து
பூ , மரியான், உத்தமவில்லன், பெங்களூர் டேஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி திருவோத்து. இவர் மலையாள சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
சமீபத்தில், இவர் நடிப்பில் உள்ளொழுக்கு மற்றும் தங்கலான் ஆகிய படங்கள் வெளி வந்தன. பார்வதி அவ்வப்போது பேட்டிகளில் ஓப்பனாக பேசும் பல விஷயங்கள் பெரிய சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறது.
பார்வதி வருத்தம்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பார்வதி அவருக்கு சினிமாவில் கிடைக்கும் வாய்ப்பு குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், " மலையாள சினிமாவில் பெண்களுக்கான கூட்டமைப்பு உருவாவதற்கு முன், எனக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னை சுற்றி பலர் இருந்தனர்.
ஆனால், அந்த கூட்டமைப்பு உருவான பின், சர்ச்சைகள் எழுந்தன எனக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்தது. என் குரலை ஒடுக்குவதற்காக எனக்கு வாய்ப்புகள் கொடுக்காமல் இருந்தார்கள்.
வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நான் அமைதி அடைந்து விடுவேன் என்று யோசித்தார்கள். அதன் பின் தான் தன்னம்பிக்கை கொண்டவளாக மாறினேன்" என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
