ரஜினி மட்டும் தான், லேடி சூப்பர் ஸ்டார் பட்டம்.. எதிர்பாரா பதிலளித்த குஷ்பூ
மூக்குத்தி அம்மன்
மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் 2 - ம் பாகம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளிவந்தது.
வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். நயன்தாரா இப்படத்தில் அம்மனாக நடிக்கிறார். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. பூஜைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூவிடம், லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறந்த நயன்தாரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
எதிர்பாரா பதில்
அதற்கு, "நயன்தாரா எடுத்த முடிவு மிகவும் சரியானது. பட்டம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. எங்கள் காலத்தில் பட்டம் கொடுத்து பார்த்ததில்லை.
சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான். மற்ற யாருக்கும் பட்டம் கொடுக்காமல் அவரவர் பெயரை வைத்து அழைத்தால் நன்றாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.