ஜோதிகா
தமிழில் சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்து நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா.
பின் முகவரி, குஷி, ரிதம், தெனாலி என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
பிஸியாக நடித்துக் கொண்டு வந்தவருக்கு நடிகர் சூர்யாவுடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஜோதிகா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார். அந்த வகையில், தற்போது டப்பா கார்ட்டெல் என்ற பாலிவுட் வெப் சீரிஸில் நடித்துள்ளார்.
ஹிந்தி பிடிக்காதா?
இந்நிலையில், பேட்டி ஒன்றில் தன் மகனுக்கு இந்தி பிடிக்காது என்று ஜோதிகா பகிர்ந்த விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " எனது மகள் நன்றாக இந்தி பேசுவாள். ஆனால் எனது மகனுக்கு இந்தி சுத்தமாக பிடிக்காது. எந்த மொழியென்றாலும் அதனை கற்றுக்கொள்வது என்பது அவர்களது உரிமை.
அதனை திணிக்கக்கூடாது" என்று கூறியதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri
