அந்த வார்த்தை மிகப்பெரிய பொய்.. காதல் குறித்து நடிகை அனுபமா கூறிய ஷாக்கிங் தகவல்
நடிகை அனுபமா
மலையாளம், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியான கொடி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து, சைரன் படத்தில் ஜெயம் ரவியின் மனைவியாகவும் அனுபமா நடித்து இருந்தார்.
ஷாக்கிங் தகவல்
இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். இந்நிலையில், காதல் குறித்த கேள்விக்கு அனுபமா கூறிய பதில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " எப்போதும் உன்னை காதலிக்கிறேன் என்ற வார்த்தை ஒரு மிகப்பெரிய பொய். என் உயிரே நீதான், நீ இல்லாமல் நான் இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு நச்சுக் காதலில் மாட்டிக்கொண்டு இருப்பவர்கள் எல்லோரும் உடனே அந்த காதலில் இருந்து விலகி விடுங்கள். இது எனது அறிவுரையாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.