தமிழ் நடிகர் ரியாஸ் கான் மீது பாலியல் புகார்.. இளம் நடிகை சொன்ன ஷாக் விஷயம்
சமீபத்தில் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை மலையாள சினிமாவை புரட்டி போட்டிருக்கிறது. மலையாள சினிமாவில் நடிகைகள் பாலியல் தொல்லைகளை சந்திப்பதாக அதிர்ச்சி தகவல்கள் பலவும் வெளிவந்தது.
நடிகர் சித்திக் மீது இளம் நடிகை ரேவதி சம்பத் புகார் கூறிய நிலையில் அவர் AMMA என்னும் மலையாள நடிகர் சங்க பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
ரியாஸ் கான்
இந்நிலையில் ரேவதி சம்பத் தற்போது தமிழ் நடிகர் ரியாஸ் கான் மீதும் பாலியல் புகார் கூறி இருக்கிறார். அவர் தன்னை பாலியல் ரீதியாக அணுகினார் எனவும் போனில் மிகவும் தப்பு தப்பாக பேசினார் என்றும் புகார் தெரிவித்து இருக்கிறார்.
என்னுடன் உடலுறவுக்கு சம்மதிக்கும் உனது தோழிகள் யாராவது இருந்தால் சொல்லு என்றும் ரியாஸ் கான் தன்னிடம் கேட்டதாக ரேவதி சம்பத் கூறி இருக்கிறார்.
ரியாஸ் கான் தமிழில் வின்னர், பொன்னியின் செல்வன் உட்பட ஏராளமான படங்களில் நடித்து இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
