தனது அப்பா அர்ஜுன் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்துள்ள ஐஸ்வர்யா... என்ன தெரியுமா?
நடிகர் அர்ஜுன்
தமிழ் சினிமாவில் நேர்மையான போலீஸ், ராணுவ வீரர், அரசியல்வாதி போன்ற கதாபாத்திரங்கள் சொன்னார் உடனே நமக்கு ஒருசில நடிகர்கள் முகம் நியாபகம் வந்துவிடும்.
இப்படி மேலே சொல்லப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதில் ஒரு பெரிய இடம் பிடித்தவர் தான் நடிகர் அர்ஜுன். 63 வயதிலும் மிகவும் பிட்டாக காணப்படும் அர்ஜுன் இப்போதும் வெயிட்டான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அஜித்தின் மங்காத்தா படம் ரீ-ரிலீஸ் ஆக அர்ஜுனின் கதாபாத்திரமும் பேசப்பட்டது.

பரிசு
அர்ஜுனின் வாரிசாக அவரது மகள் ஐஸ்வர்யா சினிமாவில் என்ட்ரி கொடுத்து படங்கள் நடித்தார்.
தற்போது அர்ஜுன் சீதா பயணம் என்ற புதிய திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அவரது மகள் ஐஸ்வர்யா தான் நாயகியாக நடித்துள்ளார், இப்பட நிகழ்ச்சி ஒன்றில் தனது அப்பாவின் பிறந்தநாளுக்கு கொடுத்த ஸ்பெஷல் பரிசு பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர், அப்பா பிறந்தநாளுக்கு நிறைய பரிசுகள் வரும் நான் அவருக்கு ஒரு பசுவை பரிசாக கொடுத்தேன். அப்பா சில வருடங்களுக்கு முன் என்னிடம் ஒரு கிர் வளக்க ஆசையா இருக்கு என்று கூறினார்.
அதை நியாபகம் வைத்து கிர் வகை பசுவை எங்கெங்கோ தேடினேன், கிடைக்கவே ரொம்ப கஷ்டமா இருந்தது. கடைசியில் குஜராத்தில் இருந்து அதை கொண்டு வந்தேன், இப்போது அப்பா கட்டின ஆஞ்சநேயர் கோவிலில் 5 கிர் பசு இருக்கிறது என கூறியுள்ளார்.