தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி...
ஐஸ்வர்யா லெக்ஷ்மி
ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தமிழ் சினிமா ரசிகர்கள் கவனிக்கும் முக்கிய நாயகிகளில் ஒருவர். 2017ம் ஆண்டு மலையாள சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் தமிழில் 2019ம் ஆண்டு ஆக்ஷன் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
அதன்பின் ஜகமே தந்திரம், கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி, மாமன், தக் லைஃப் என தொடர்ந்து படங்கள் நடித்திருக்கிறார். கடைசியாக கட்டா குஸ்தி 2 படத்தில் நடித்துள்ளார்.
தமிழ், மலையாளம் தாண்டி தெலுங்கிலும் நிறைய ஹிட் படங்கள் நடித்திருக்கிறார்.

திருமணம்
சமீபத்தில் இவர் தனது திருமணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், திருமணம் என்னும் அமைப்பில் நுழைய எனக்கு பல சிக்கல்கள் உள்ளது.

கட்டா குஸ்தி 2 படத்தில் ஒரு குழந்தையுடன் நெருக்கமாக இருந்த பொழுது என் தாய்மை உணர்வுகள் விழித்துக்கொண்டன.
எனக்காக வருபவன் நல்ல தந்தையாக இருப்பார் என்றும் என்னை விட்டு ஓடிப்போக மாட்டார் என்றும் குறைந்தபட்சம் என்னால் கணிக்கக்கூடிய ஒருவருடன் நான் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார்.