40 நாட்களில் 15 கிலோ வரை எடை குறைத்தது எப்படி.. நடிகை ஐஸ்வர்யா கொடுத்த டிப்ஸ்
நடிகை ஐஸ்வர்யா
சினிமாவில் 1990 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன்.
நாயகியாக நடித்து வந்தவர் திருமணத்திற்கு பின் அம்மா கதாபாத்திரங்களிலும், சீரியல்களிலும் நடித்தார்.
வெயிட் லாஸ்
கடந்த 2018ம் ஆண்டு தனது உடல் எடை 90 கிலோவை எட்டியதால் உணவு முறையில் மாற்றம் செய்துள்ளார்.
அதிகம் உடல் எடை போட்டதால் தாவரம் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளார்.
அதன்பிறகு உடலில் பல மாற்றங்களை பார்த்த அவர் பால் பொருட்கள், ஆராக்கியமற்ற உணவுகளை தவிர்ந்துள்ளார். உணவில் மாற்றம் கொண்டு வந்தவர் பின் யோகா பயிற்சியை தொடங்கியுள்ளார்.
யோகாவை முறையாக கற்றால் மீண்டும் எடை ஏறுவதற்கு வாய்ப்பே கிடையாது. நீங்கள் நினைத்தாலும் எடை ஏற விடாது. யோகா குருவிடம் சென்று யோகா கற்க ஆரம்பியுங்கள்.
யூடியூப் வீடியோ, புத்தகம் பார்த்து யோகா செய்யாதீர்கள் என உடல் எடை குறைத்த விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
