தமிழ் பட ஹீரோயின் தூக்கிட்டு தற்கொலை! கடிதத்தில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்
சினிமா துறையில் நடிகர் நடிகைகள் தற்கொலை என்பது தொடர்கதை ஆகிவிட்டது.
நடிகை தற்கொலை
சமீபத்தில் சென்னை ஆழ்வார்திருநகரில் பவுலின் ஜெசிக்கா என்ற நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பானது. அவர் காதல் தோல்வியால் இந்த முடிவெடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரது காதலனிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலை தற்போது மேலும் ஒரு நடிகை தற்கொலை என்கிற செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 9 திருடர்கள் என்ற படத்தில் நடித்த அகன்க்ஷா மோகன் என்ற நடிகை தான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சிக்கிய கடிதம்
30 வயதாகும் அகன்க்ஷா மும்பையில் அந்தேரி பகுதியில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்திருக்கிறார். சினிமாவில் பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.
அவர் ஹோட்டல் அறையை நீண்ட நேரம் திறக்காததால் ஹோட்டல் மேனேஜர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது தான் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
மேலும் அவர் இறப்பதற்கு முன் ஒரு கடிதமும் எழுதி வைத்திருக்கிறார். அதில் "என்னை மன்னித்துவிடுங்கள். இதற்கு யாரும் காரணம் இல்லை. நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கு அமைதி வேண்டும்" என அவர் எழுதி இருக்கிறார்.
போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: பிக் பாஸ் 6ல் எதிர்பார்க்காத மாற்றம்.. கமல்ஹாசனே அறிவிப்பு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்