என்னது நடிகை அமலா பாலின் தம்பியும் ஒரு நடிகர் தானா?- என்னென்ன படங்கள் நடித்துள்ளார், இதோ புகைப்படம்
அமலாபால்
நடிகை அமலாபால், சிந்து சமவெளி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்.
அந்த படம் பெயர் கொடுக்கவில்லை என்றாலும் அடுத்து அவரை ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு அமைந்த திரைப்படம் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா.
அப்படம் அவருக்கு பெரிய ரீச் கொடுக்க விஜய்யுடன் தலைவா, தெய்வத் திருமகள், வேலையில்லா பட்டதாரி, வேட்டை, பசங்க 2 என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.
பீக்கில் இருந்த போதே 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார், ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
சிங்கிளாக நிறைய இடங்களுக்கு சென்று வாழ்க்கையை அனுபவித்த வந்த அமலாபால் கடந்த வருடம் தனது நீண்ட நாள் நண்பர் ஜகத் தேசாயை திருமணம் செய்துகொண்டார், தற்போது கர்ப்பமாக உள்ளார்.
தம்பியின் விவரம்
நடிகை அமலாபாலுக்கு அபிஜித் பால் என்ற தம்பி உள்ளார். தனது தம்பியின் திருமண புகைப்படங்களை சில மாதங்களுக்கு முன் அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அபிஜித்தும் நடிகர் தானாம், மலையாள படங்களில் நடித்துள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
