34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா
அமலா பால் பிறந்தநாள்
தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவரான அமலா பாலுக்கு இன்று பிறந்தநாள். 34வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்றைய நாளில் அவருடைய சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

நடிகை அமலா பால் தமிழில் அறிமுகமான முதல் படம் சர்ச்சையானது. இதன்பின், அவர் தன்னை சிறந்த நடிகை என நிரூபித்த திரைப்படம் மைனா. அமலா பால் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வரும் முதல் படமும் இதுவே ஆகும். இதன்பின் தெய்வ திருமகள், வேலையில்லா பட்டதாரி, தலைவா என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்து வந்தார்.
இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்களுடைய திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 2017ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின், 2023ஆம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகன் உள்ளார்.

சொத்து மதிப்பு
ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் திருமண வாழ்க்கை என பயணித்து வரும் நடிகை அமலா பாலின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 40 கோடி ஆகும். இவருக்கு கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா ஒன்று உள்ளது. மேலும் ஜகத் தேசாயின் சொத்துக்களை அமலா பால் சொத்து மதிப்புடன் சேர்த்தால் மொத்தமாக ரூ. 50 கோடி இருக்கும் என்கின்றனர். ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri