நடிகை அமலாபால் மகனா இது?.. வைரலாகும் அழகிய புகைப்படம்
அமலாபால்
தமிழில் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று பிரபலமடைந்தவர் நடிகை அமலாபால்.
அப்பட வெற்றியால் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா ஆகியோர் படங்களில் நடித்தார். முன்னணி நாயகியாக இருந்தபோதே இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து அதன் பின் சில காரணத்தினால் விவாகரத்து பெற்றார்.
தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து நவம்பர் 30ம் தேதி மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த ஜுன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது, மகனுக்கு இலை என பெயர் வைத்துள்ளனர்.
அழகிய புகைப்படம்
இந்நிலையில், அமலாபால் புத்தாண்டை முன்னிட்டு அவரது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது, அமலாபால் மகனா இது ? என ரசிகர்கள் வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.