சுத்தமாக மேக்கப் இல்லாமல் நடிகை அமலாபால் வெளியிட்ட போட்டோ- செம வைரல்
நடிகை அமலாபால்
தமிழில் 2010ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தின் மூலம் நாயகியாக பிரபலமானவர் தான் நடிகை அமலாபால்.
அப்படத்தின் மூலம் முன்னணி நாயகியாக உயர்ந்த இவர் விஜய், தனுஷ் ஜெயம் ரவி என பலருடன் இணைந்து படங்கள் நடித்திருக்கிறார்.
இவர் ஆடை என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக பாராட்டுக்களும் பெற்றார், அதேசமயம் சில மோசமான விமர்சனங்களையும் சந்தித்தார். கடைசியாக தமிழில் கடாவர் என்ற படத்தில் நடித்திருந்தார், இப்படத்தை அமலாபாலே தயாரித்தும் இருந்தார்.
ஆனால் இப்போது படங்களில் நடிப்பதை தாண்டி அமலாபால் ஆன்மீகம், யோகா, தியானம் என தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
லேட்டஸ்ட் க்ளிக்
புதுப்புது இடங்களுக்கு சென்று நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு வரும் அமலாபால் சமீபத்தில் சுத்தமாக மேக்கப் இல்லாத போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.