நான் உண்மையை கூறினால் நடிகை ராதா சிறைக்கு செல்ல நேரிடும்... அம்பிகா பரபரப்பு பேட்டி

By Yathrika Sep 23, 2026 07:30 AM GMT
Report

நடிகை ராதா

தமிழ் சினிமாவில் 80களில் பல வெற்றிப் படங்களில் நடித்து குடும்ப ரசிகர்களை கவர்ந்தவர்கள் நடிகை அம்பிகா மற்றும் நடிகை ராதா.

இவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன், விஜயகாந்த் என எல்லா முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். எப்போதும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் காணப்பட்ட ராதா-அம்பிகா இடையே இப்போது சொத்து பிரச்சனை வெடித்துள்ளது.

அண்மையில் நடிகை ராதா, சுமார் ரூ. 46 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளதாக தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுன் குஞ்சன் நாயர் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

நான் உண்மையை கூறினால் நடிகை ராதா சிறைக்கு செல்ல நேரிடும்... அம்பிகா பரபரப்பு பேட்டி | Actress Ambika About Radha Police Complaint

அம்பிகா பேட்டி

இந்த நிலையில் சகோதரி ராதா புகார் அளித்தது குறித்து நடிகை அம்பிகா பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், அவர் தான் காசோலை வழங்கினார், அதை வங்கியில் நிறுத்தியதும் ராதா தான். போரூர் ஏஆர்எஸ் கார்டன் யாருக்கு சொந்தம் என்பதில் தான் பிரச்சனை, அந்த சொத்தில் இருந்து எனது பெயரை நீக்கிவிட்டனர்.

நான் உண்மையை கூறினால் நடிகை ராதா சிறைக்கு செல்ல நேரிடும்... அம்பிகா பரபரப்பு பேட்டி | Actress Ambika About Radha Police Complaint

ராதா தரப்பில் இருந்து எனக்கு ரூ. 97 கோடி வர வேண்டும், சொத்துக்களை பிரித்த வகையில் ராதா எனக்கு 5 காசோலைகளை வழங்கினார். அவரே கொடுத்துவிட்டு வங்கியில் அதை அவரே நிறுத்தியுள்ளார், பணம் போனது எனக்கு தான்.

ராதாவின் சொத்து மதிப்பு ரூ. 5000 கோடி, நான் உண்மையை கூறினால் ராதா சிறைக்கு செல்ல நேரிடும் என பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US