நடிகை அம்மு அபிராமிக்கு எப்போ திருமணம்.. அவரே கூறிய தகவல்

Kathick
in பிரபலங்கள்Report this article
அம்மு ஆபிராமி
ராட்சசன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தெரிய துவங்கியவர் நடிகை அம்மு ஆபிராமி. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படம் மக்கள் மத்தியில் இவருக்கு அடையாளத்தை உருவாக்கியது.
இதை தொடர்ந்து தம்பி, நவரசா, யானை என நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 3யில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை பிடித்தார்.
திருமணம் எப்போது
இந்நிலையில், அண்மையில் நடிகை அம்மு அபிராமி தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடியுள்ளார். அப்போது அவரிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்க்கு பதிலளித்த அம்மு அபிராமி, ' எனக்கு தற்போது 22 வயது ஆகிறது. இந்த வயதில் திருமணம் செய்வதை விட எனக்கு பல இலக்குகள் உள்ளன. திருமணம் செய்து கொள்ள எது சரியான நேரம் என்று நான் நினைக்கும் பொழுது திருமணம் செய்து கொள்வேன் என்று பதிலளித்துள்ளார்.