நடிகை எமி ஜாக்சனின் 34வது பிறந்தநாள்... அவருடைய முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
எமி ஜாக்சன்
இயக்குநர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன்.

முதல் படமே இவருக்கு மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுக்க தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. தாண்டவம், எவடு, ஐ, தங்கமகன், தெறி, 2.0 என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை தொடர்ந்து படங்கள் நடித்து வந்த எமி ஜாக்சன் தற்போது அவ்வப்போது மட்டுமே படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
திருமண வாழ்க்கை
George Panayiotou என்பவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த எமி ஜாக்சன், கடந்த 2019ஆம் ஆண்டு தனது முதல் மகனை பெற்றெடுத்தார். தமது முதல் மகனுக்கு Andreas என பெயர் சூட்டினார். பின் தனது George Panayiotou - எமி ஜாக்சன் பிரிந்துவிட்டனர்.

இதன்பின், Ed Westwick என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் எமி ஜாக்சன். இவர்களுக்கு ஆஸ்கர் என்கிற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு
இன்று நடிகை எமி ஜாக்சனுக்கு 34வது பிறந்தநாள். ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் எமி ஜாக்சன் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 45+ கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
