மனதை உடைத்து விட்டது.. பகல்காமுக்கு சுற்றுலா சென்ற நடிகை ஆண்ட்ரியாவின் வைரல் பதிவு
ஆண்ட்ரியா
நடிகை ஆண்ட்ரியா தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சினிமாவில் சம்பாதித்து வைத்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்.
இதன்பின் வடசென்னை, அரண்மனை, விஸ்வரூபம் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் பல லட்சம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.
தற்போது உலகம் முழுவதும் பேசப்படும் முக்கிய தலைப்பு என்றால் அது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தான். அங்கு சுற்றுலா சென்ற 27 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இதை கண்டித்து பல சினிமா நட்சத்திரங்கள் அவர்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
வைரல் பதிவு
இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா முன்பு அந்த இடத்திற்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை பதிவிட்டு அதன் கீழ், "அங்கு நானும் சுற்றுலா சென்ற பயணிதான்.
சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் சென்று வரும் ஒரு சுற்றுலா பகுதியை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடத்த எப்படி அவர்களுக்கு மனம் வந்தது. இந்த தகவல் மனதை உடைத்து விட்டது" என்று பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
You May Like This Video