பிரபல நடிகையின் காலில் விழுந்த ரசிகர்.. வைரலாகும் வீடியோ
அஞ்சு குரியன்
மலையாளத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அஞ்சு குரியன். இவர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த நேரம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
இதன்பின் சில திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் கதாநாயகியாக அறிமுகமானது 2016ல் வெளிவந்த Kavi Uddheshichathu..? என்கிற படத்தில் தான். மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வரும் இவர் தற்போது தமிழில் உருவாகி வரும் wolf எனும் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.
காலில் விழுந்த ரசிகர்
திரையுலக நட்சத்திரங்களின் வீடியோ அல்லது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது அஞ்சு குரியனின் ரசிகர் ஒருவர் செய்த செயல் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
சமீபத்தில் நடிகை அஞ்சு குரியன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் திடீரென நடிகை நஞ்சு குரியனின் காலில் விழுந்து கண்கலங்கியபடி புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த வீடியோ..
WTF ?#AnjuKurian pic.twitter.com/MBWefDxY9h
— AB George (@AbGeorge_) August 24, 2024