இமானை தூண்டி விட்டிருக்காங்க, சிவகார்த்திகேயனுக்கும் குழந்தைகள் இருக்கு: பிரபல நடிகை
சிவகார்த்திகேயன் தனக்கு பெரிய துரோகத்தை செய்துவிட்டார், அதை வெளியில் சொன்னால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும் என இமான் பேட்டியில் கூறியது பெரிய சர்ச்சை ஆனது.
சிவகார்த்திகேயன் பெயரை இந்த சர்ச்சை பெரிய அளவில் டேமேஜ் செய்துவிட்டது என பலரும் கூறி வருகிறார்கள். இருப்பினும் அவர் இது பற்றி எந்த வித விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை.
சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகவும் சில பிரபலங்கள் பேட்டி அளித்து வருகின்றனர். 'வாயை மூடிட்டு இருக்கனும்' என சீரியல் நடிகர் தீபக் அளித்த பேட்டி முன்பு வைரல் ஆனது.
சிவகார்த்திகேயனுக்கும் குழந்தை இருக்கு..
இந்நிலையில் தற்போது நடிகை அனுபரமி அளித்திருக்கும் ஒரு பேட்டியில் சிவகார்திகேயன் சர்ச்சை பற்றி பேசி இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் அந்த விஷயத்தை செய்தாரா இல்லையா என்பதே இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது. சொன்னால் தனது குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும் என இமான் சொல்கிறார். சிவகார்த்திகேயனுக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் இதை பற்றி கேட்டால் என்ன நினைப்பார்கள்.
இவ்வளவு காலம் கழித்து அவர் ஏன் இதை வெளியில் சொல்ல வேண்டும், அவரை யாரோ தூண்டி விட்டிருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் சினிமா நடிகர் என்பதால் இதை பெரிதாக பேசுகிறார்கள். மனிதன் என்றால் தவறு செய்வது சகஜம்தான், அதற்காக அதை வெளியில் சொல்லி ஏன் அசிங்கப்படுத்தவேண்டும். அந்தரங்கத்தை வெளியில் சொல்லாமல் விட்டிருக்கலாம் என அனுபரமி கூறி இருக்கிறார்.