பிரபல நடிகருடன் நடிகை அபர்ணா தாஸுக்கு திருமணம் முடிந்தது.. தாலி கட்டும் வீடியோ இதோ
அபர்ணா தாஸ்
விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அபர்ணா தாஸ். இதன்பின் கவினுடன் இணைந்து டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இளைஞர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகை அபர்ணா தாஸ் 28 வயதில் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆம், மலையாள நடிகரான தீபக் என்பவருடன் இவருக்கு திருமணம் நிச்சையாக்கப்பட்டது.
திருமணம்
நடிகை அபர்ணா தாஸ் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் நடிகர் தீபக், சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று அபர்ணா தாஸ் மற்றும் தீபக்கின் திருமணம் கோலாகலமாக கேரளாவில் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri