நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளிவந்த நடிகை அசினின் புகைப்படம்... திருமண நாள் கொண்டாட்ட போட்டோ வைரல்
நடிகை அசின்
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் எப்போதுமே மறக்க முடியாத ஒரு நடிகையாக இருப்பவர் தான் அசின்.
திருமணம் செய்ததால் மிக விரைவிலேயே சினிமாவை விட்டு வெளியேறிவிட்டார்.

தமிழில் உள்ளம் கேட்குமே என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, கஜினி, சிவகாசி, போக்கிரி, காவலன், ஆழ்வார், வரலாறு, வேல், தசாவதாரம் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.
கஜினி பட ஹிந்தி ரீமேக் மூலம் பாலிவுட் சென்றவர் அக்ஷய் குமார், சல்மான் கான் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.

திருமணம்
கடந்த 2016ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை நடிகை அசின் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அதோடு சினிமா பக்கமே வரவில்லை, இன்ஸ்டாவில் எப்போதும் தனது மகளின் புகைப்படங்களை மட்டுமே வெளியிடுவார், அவரது புகைப்படங்களை பதிவிடவே மாட்டார்.
இந்த நிலையில் இன்று அவர்களது 10ம் ஆண்டு திருமண நாள், ஸ்பெஷல் தினத்தில் அசினின் கணவர் ராகுல் ஷர்மா மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து வாழ்த்து கூறியுள்ளார்.
