இப்போதும் ரசிகர்களால் மிஸ் செய்யப்படும் நடிகை அசின் சொத்து மதிப்பு- எவ்வளவு தெரியுமா?
நடிகை அசின்
ஆரம்பத்தில் மலையாளத்தில் விளம்பரம் நடிக்க தொடங்கி பின் 2001ம் ஆண்டு நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வாகா என்ற படத்தில் நடித்தார்.
முதல் படம் சுமாரான வரவேற்பை பெற அடுத்து தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ரவி தேஜாவுடன் ஒரு படத்திலும் நாகர்ஜுனாவுடன் ஒரு படத்திலும் 2003ம் ஆண்டு நடித்தார்.
அந்த இரண்டு படங்களும் ஹிட் அடிக்க தமிழில் ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானார்.
விஜய்யுடன் நடித்த சிவகாசி, போக்கிரி ஆகிய இரண்டு படங்களும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அதனையடுத்து சூர்யாவுடன் நடித்த கஜினி படம் எப்படிபட்ட ஹிட் என்பது சொல்லவே வேண்டாம். தொடர்ந்து சூர்யாவுடன் வேல், அஜித்துடன் ஆழ்வார், வரலாறு கமலுடன் தசாவதாரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.
கஜினி ஹிந்தி ரீமேக் மூலம் பாலிவுட் சென்றாலும் அங்கு அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை. அசின் தனது கரியர் உச்சத்தில் இருந்தபோதே கடந்த 2016ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சொத்து மதிப்பு
இப்போதும் ரசிகர்களால் மிஸ் செய்யப்படும் நடிகை அசின் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு அசினின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அசின் மட்டுமே ரூ. 117 கோடி வரை சொத்து சேர்த்திருக்கிறாராம்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
