க்யூட்டாக இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா.. தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருந்தவர்
வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அப்படி தான் தற்போது பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது. க்யூட்டாக இந்த போட்டோவில் போஸ் கொடுத்திருக்கும் இந்த குழந்தை யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
நடிகை அசின்
அவர் வேறு யாருமில்லை நடிகை அசின் தான். ஆம், தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகை அசின். தமிழில் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகில் வலம் வந்தார்.
டாப் நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அசின், கடந்த 2016ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவிலிருந்து விலகி, கணவர், மகள் என நடிகை அசின் செட்டிலாகிவிட்டார் என்பது குறித்துப்பிடத்தக்கது.