40 வயதில் IVF முறை மூலம் இரட்டை குழந்தை பெற்ற நடிகைக்கு ஏற்பட்ட சோகம்... என்ன ஆனது?
பாவனா
சினிமாவில் இந்த வருடம் ஆரம்பித்தது முதல் நிறைய நடிகைகளுக்கு கல்யாணம், குழந்தை பிறந்தது என சந்தோஷமான விஷயம் நடந்தது.
சந்தோஷ செய்தியாக வந்த நிலையில் இப்போது ஒரு நடிகை பற்றிய சோகமான தகவல் வந்துள்ளது. கன்னட நடிகை பாவனா ரமண்ணா சந்திரமுகி பிரனாஷி என்ற படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.
தமிழில் மோகன் நடிப்பில் வெளியான அன்புள்ள காதலுக்கு என்ற படத்தில் அறிமுகமானார். பின் பிரசாந்தின் விரும்புகிறேன், நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சோகமான தகவல்
40 வயதாகும் பாவனாவிற்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை, ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பியுள்ளார்.
இதனால் பல மருத்துவமனை ஏறி இறங்கியவருக்கு ஒரு மருத்துவர் உதவ முன்வர 2 பெண் குழந்தைகளை பெற்றிருக்கிறார்.
இதில் என்ன சோகம் என்றால் 2 குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளது.