அரிய உடல்நலப் பிரச்சனையால் அவதிப்படும் பிரபல நடிகை... அந்த வலி இருக்கே, நடிகை எமோஷ்னல்
பிரபல நடிகை
பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு என்ன கவலை உள்ளது, நல்ல வருமானம் ஜாலியாக இருப்பார்கள் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது.
ஆனால் சினிமாவில் இருக்கும் அனைவருமே நன்றாக சம்பாதிப்பதும் இல்லை, ஆரோக்கியமாக இருப்பது இல்லை. உதாரணத்திற்கு நடிகை சமந்தாவை கூறலாம், நடிப்பில் பிஸியாக இருந்தவருக்கு நோய் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
தற்போது ஒரு பிரபல நடிகையும் தனக்கு இருக்கும் உடல்நல பிரச்சனை குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் பேசியுள்ளார்.
யார் அவர்
அவர் வேறுயாரும் இல்லை பாலிவுட் சினிமாவின் இளம் நாயகி பூமி பெட்னேகர் தான். இவர் தனக்கு இருக்கும் அரிய தோல் நோய் பற்றி தான் கூறியுள்ளார்.
எனக்கு எக்ஸிமா என்ற தோல் நோய் இருக்கிறது, சிறுவயதிலிருந்தே இந்தப் பிரச்சினை இருந்திருக்கிறது, ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் கண்டறியப்பட்டது.
தான் அடிக்கடி பயணம் செய்யும் போது அல்லது அதிக மன அழுத்தத்தை அனுபவிக்கும்போது தனது தோலில் தடிப்புகள் மற்றும் அதிகப்படியான அரிப்புகள் ஏற்படும்.
அந்த வலியால் தான் மிகவும் சங்கடப்படுவதாக தெரிவித்துள்ளார். தற்போது அவர் சமூக ஊடகங்கள் மூலம் இந்த நோய் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.