சன் டிவியின் கயல் சீரியலில் மாற்றப்பட்டுள்ள முக்கிய நடிகை... புதிய என்ட்ரி யார் பாருங்க...
கயல் சீரியல்
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் கயல்.
அப்பா இல்லாத இடத்தில் குடும்பத்திற்கு அப்பாவிற்கு அப்பாவாக, அக்காவாக இருந்து தனது சகோதர, சகோதரிகளுக்கு ஒரு துணையாக வாழ்ந்து வருகிறார்.
இதற்கு இடையில் காதலித்தவரை பெரிய போராட்டத்திற்கு பிறகு திருமணம் செய்தார், ஆனால் திருமணம் ஆனது முதல் எழில் தனது தொழில் வளர்ச்சிக்காக பாடுபட்டார், இப்போது வரை முடியவில்லை.

ஆனந்தி திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் எழில், கயலே வேண்டாம் என மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டார். தனியாக இருந்த அவரை ஆட்டோ ஓட்டுனர் நண்பர்கள் அனைவரும் எழிலை சரமாரியாக அடிக்க இப்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.
ஆனந்தி பிரச்சனை முடிவடைய அடுத்து எழிலை தேட ஆரம்பித்தார் கயல். எழில் எங்கே தான் போனார் என கயலும் அவரை தேடி அலைகிறார்.

புரொமோ
இந்த வார எபிசோட் புரொமோவில், எழில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதை கண்ட அவரது அம்மா ஷாக் ஆகிறார்.

தனது மகனின் இந்த நிலைமைக்கு அந்த கயல் தான் காரணம் என அவர் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார், இதனால் போலீஸ் கயலை கைது செய்கிறார்கள். கதைக்களம் மிகவும் பரபரப்பாக செல்ல இப்போது ஒரு நடிகையின் மாற்றம் நடந்துள்ளது.
அதாவது கயல் சீரியலில் தீபிகா கதாபாத்திரத்தில் நடித்துவந்த சாஷ்வி உயிரிழந்த நிலையில் அவருக்கு பதில் தீபிகா வேடத்தில் இனி விஜே அக்ஷயா நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri