இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?.. பிரபல கதாநாயகி தான்!
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில், கன்னடத்தில் சிவராஜ் குமார், சுதீப், புனித் ராஜ்குமார் போன்ற நட்சத்திர ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவரின் சிறு வயது போட்டோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அட இவரா?
அவர் வேறு யாருமில்லை, நடிகை ஆஷிகா ரங்கநாத் தான். கன்னட சினிமாவில் வலம் வந்த இவர், தெலுங்கு சினிமாவிலும் தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கி உள்ளார்.
தற்போது, சிரஞ்சீவியுடன் விஸ்வம்பராவில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் த்ரிஷா முக்கிய கதாநாயகியாக நடிக்க, ஆஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து, தமிழில், கார்த்தியின் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.