சிறு வயதில் மிகவும் அழகாக உள்ளாரே .. இந்த பிரபல நடிகை யார் தெரிகிறதா?
தற்போது பாப்புலர் ஆக இருக்கும் நடிகர்களின் குழந்தை பருவ போட்டோக்களை பார்த்தால் அடையாளம் தெரியாத ஒன்றாக தான் இருக்கும்.
அப்படி ஒரு முக்கிய நடிகையின் குழந்தை பருவ போட்டோ தான் தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அட இவரா
அவர் வேறுயாருமில்லை கடந்த 2003 -ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான நடிகை சதா தான்.
இப்படம் தெலுங்கு மொழியில் வெளியான ஜெயம் படத்தின் ரீமேக் ஆகும். இதைத்தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேலும் சதா, தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம் மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். பிஸி நடிகையாக வலம் வந்துகொண்டு இருந்த சதா, சமீபகாலமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.
சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஷோ நடுவராக இருந்து வருகிறார். தற்போது, இவருடைய சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.