விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த இந்த நடிகை யார் என்று தெரிகிறதா, இதோ
யார் என்று தெரிகிறதா?
தமிழ் சினிமாவில் இதுவரை பல நடிகைகள் வந்து சென்றுள்ளனர், இதில் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் நீங்காது இடம்பிடித்தவர்கள்.
இந்நிலையில் நம் தளத்தில் நடிகர், நடிகைகள் போன்ற பல பிரபலங்கள் சிறு வயது மற்றும் அரிய புகைப்படங்களை நாம் பார்த்து வருகின்றோம், அப்படி இன்று நாம் பார்க்க போவது யார் தெரியுமா? இதோ
புன்னகை அரசி
மக்கள் மனதை ஆனந்தம் படத்தின் மூலம் கொள்ளை கொண்டவர் நடிகை சினேகா, ஒற்றை நாணயம் என்ற ஒரே பாட்டில் அனைத்து இளைஞர்களின் மனதை கவர்ந்தவர்.
அதோடு பல குடும்ப படங்கள் நடித்து அனைத்து குடும்பங்கள் மனதிலும் இடம்பிடித்த இவர், தமிழ் சினிமாவில் விஜய், அஜித், விக்ரம் ,சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தியவர்.
தற்போது சினேகாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று செம வைரல் ஆகி வருகின்றது, அந்த புகைப்படம் தான் நாம் மேலே பகிர்ந்தது.




