விஜய்யின் படத்தில் நடிக்க அழுதுள்ள பிரபல நடிகை... அவரது அம்மாவே கூறிய தகவல்
நடிகர் விஜய்
தமிழ் சினிமா மக்கள் இவர் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என ஆசைப்படுவது நடிகர் விஜய்.
ஆனால் அவரோ மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என தனது 69வது படத்துடன் நடிப்பதை நிறுத்திவிட இருப்பதாக ஒரு தகவல் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
அவரது கடைசி படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
பிரபல நடிகை
பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்தவர் பிரியங்கா சோப்ரா.
கடந்த 2000ம் ஆண்டு நடன்த மிஸ் வேர்ட்டு போட்டியில் கலந்துகொண்டு வெற்றியாளரானார்.
அதில் இருந்து தொடங்கிய அவரது சினிமா பயணம் இப்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளது. சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா முதலில் நடிப்பதற்கு அழுதாராம்.
முதலில் படங்களில் நடிப்பதற்கு அவருக்கு விருப்பமே இல்லையாம். விஜய்யின் தமிழன் பட வாய்ப்பு கிடைத்ததை அவரிடம் அவரது தாய் மது சோப்ரா சொல்லியபோது அழுதுவிட்டாராம்.
பிரியங்கா சோப்ரா அழுதுகொண்டே நான் நடிக்கவில்லை என்று கூறினாராம், ஆனால் அவரது தாய் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இந்த தகவல் பிரியங்கா சோப்ரா தாயார் மது சோப்ரா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

மோடி இல்லாமல் 150 இடங்களில் கூட வெல்ல முடியாது - விவாதமாகும் எம்.பி. நிஷிகாந்த் துபேவின் பேச்சு! IBC Tamilnadu
