பிக்பாஸ் 5வது சீசனில் இந்த பிரபல நாயகியின் மகளா?- கசிந்த தகவல்
பிக்பாஸ் 5வது சீசன் படு பிரம்மாண்டமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. நிகழ்ச்சிக்கு 5வது சீசனில் லோகோ, செட் டிசைன் எல்லாம் வடிவமைக்கப்பட்டு விட்டதாம்.
விரைவில் சின்ன புரொமோ வெளியாகும் என்கின்றனர். இதற்கு இடையில் தான் யார் யார் 5வது சீசனில் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற விவரம் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
அப்படி சீரியல் நடிகர் ஈஸ்வர், சமீபத்தில் ஒரு முக்கிய தொடரில் இருந்து வெளியேறிய நடிகர், குக் வித் கோமாளி 2 பிரபலம் என கலந்துகொள்கிறார் என்று செய்திகள் வந்தன.
தற்போது என்னவென்றால் குக் வித் கோமாளி 2 பிரபலமும், நடிகையுமான ஷகீலாவின் மகள் மிலா பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ள உறுதியாகியுள்ளதாக கூறுகின்றனர்.
ஆனால் இந்த விவரங்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

எங்கள் பிரிவுக்கு அந்த நபர் மட்டுமே காரணம்; இது திட்டமிட்ட சதி - அதிர்ச்சி கொடுத்த ஆர்த்தி IBC Tamilnadu
