கர்ப்பமாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே.. கியூட்டான போட்டோவுடன் அறிவித்த பிரபலம்
தீபிகா படுகோனே
நடிகை தீபிகா படுகோனே, பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக இருப்பவர்.
இவர் ஒரு படம் நடிக்கிறார் என்றாலே அது டாப் வசூல் வேட்டை நடத்துகிறது.
2006ம் ஆண்டு கன்னடத்தில் ஐஸ்வர்யா படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் 2007ம் ஆண்டு ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
கோச்சடையான் என்ற ஒரேஒரு தமிழ் படத்தில் நடித்தவர் அதிகம் பாலிவுட் படங்களில் நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் ஃபைட்டர் திரைப்படம் வெளியாகி இருந்தது, படமும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது.
குட் நியூஸ்
தீபிகா படுகோனேவிற்கு, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின் இருவரும் தங்களது பட வேலைகளில் பிஸியாக இருக்க தற்போது இன்று ஒரு குட் நியூஸ் அறிவித்துள்ளனர்.
அதாவது நடிகை தீபிகா படுகோனே கர்ப்பமாக உள்ளார்களாம். கியூட்டான போட்டோவுடன் நடிகை இந்த குட் நியூஸை அறிவித்துள்ளார்.

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
