39வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை தீபிகா படுகோன்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
தீபிகா படுகோன்
பாலிவுட் மட்டுமின்றி உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். இவர் பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை கடந்த ஆண்டு பிறந்தது.
இன்று நடிகை தீபிகா படுகோனின் 39வது பிறந்தநாள் ஆகும். ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தீபிகாவிற்கு சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
குடும்பத்துடன் பிக் பாஸ்-க்கு வந்த விஜய் சேதுபதியின் நண்பன்.. யார் எதிர்பார்க்காமல் நடந்த விஷயம்! வீடியோ இதோ
சொத்து மதிப்பு
இந்த நிலையில், நடிகை தீபிகா படுகோனின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
ஆலிபக் கடற்கரையில் நடிகை தீபிகா படுகோனுக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இதனுடைய மதிப்பு ரூ. 22 கோடி என தகவல் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி ரூ. 100 கோடி மதிப்புள்ள பீச் ஹவுஸ் ஒன்றும் தீபிகா வைத்துள்ளார்.
பென்ஸ், ஆடி, ரேஞ்ச் ரோவர், போர்ஷு, மினி கூப்பர் உள்ளிட்ட ஆறு சொகுசு கார்களை சொந்தமாக கொண்டுள்ளாராம் நடிகை தீபிகா. கடந்த ஆண்டு இறுதி வரை நடிகை தீபிகா படுகோனின் சொத்து மதிப்பு ரூ. 500 கோடி என சொல்லப்படுகிறது.
மேலும் இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ. 15 கோடி முதல் ரூ. 20 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். பாலிவுட் மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக தீபிகா இருக்கிறார். விளம்பர படங்களில் நடிக்க ரூ. 7 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.