புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை தேவயானி, இந்த முறை எந்த தொலைக்காட்சி தெரியுமா?
நடிகை தேவயானி
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் தேவயானி. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியவர்.
பெரும்பாலும் குடும்ப பாங்கான கதைகளிலேயே நடித்து மக்களை கவர்ந்தார். ஒருகட்டத்தில் நாயகியாக சினிமாவில் மார்க்கெட் போனது என்பதை உணர்ந்த அவர் அப்படியே சின்னத்திரை பக்கமும் வந்து கலக்கினார்.
கோலங்கள், ராசாத்தி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற தொடர்கள் தேவயானிக்கு பெரிய ரீச் கொடுத்தன.
புதிய தொடர்
கடைசியாக தேவயானி ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்திருந்தார், அண்மையில் தான் அந்த தொடரும் முடிவுக்கு வந்தது.
தற்போது என்ன தகவல் என்றால் நடிகை தேவயானி ஜீ தமிழிலேயே ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
அவருடன் நடிகை விஜி சந்திரசேகரும் கமிட்டாகியுள்ளார் என்கின்றனர்.
உடல் எடையை சுத்தமாக குறைத்தது எப்படி?- ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா கூறிய டிப்ஸ்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
