நிகழ்ச்சி மேடையில் தனது மகள் இனியாவிற்காக நடிகை தேவயானி செய்த செயல்... நடக்குமா?

By Yathrika Feb 18, 2026 12:30 PM GMT
Report

தேவயானி

90களில் காலகட்டத்தில் எந்த ஒரு கிளாமர் இல்லாமல், பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் மிகவும் கியூட்டான நடிகையாக குடும்ப பாங்கான கதைகளில் நடித்து மக்களை கவர்ந்தவர் தான் நடிகை தேவயானி.

தேவயானிக்கு முதலில் பெரிய அடையாளத்தை கொடுத்த படம் என்றால் அது அஜித்துடன் நடித்த காதல் கோட்டை தான். அதன்பின் பாட்டாளி, சூர்யவம்சம், நினைத்தேன் வந்தாய், ப்ரெண்ட்ஸ் என பல வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார்.

தமிழை தாண்டி மற்ற மொழிகளில் நடித்தபோதும் கிளாமருக்கு நோ சொல்லி வெற்றிப் படங்களையும் கொடுத்தார்.

பீக்கில் இருந்த போதே இயக்குனர் ராஜகுமாரனை வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

நிகழ்ச்சி மேடையில் தனது மகள் இனியாவிற்காக நடிகை தேவயானி செய்த செயல்... நடக்குமா? | Actress Devayani Request Opportunity For Daughter

வாய்ப்பு

நடிகை தேவயானியின் மகள் இனியா ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது பாடல் திறமையை வெளிக்காட்டினார், ஆனால் அவரால் கடைசி வரை வர முடியவில்லை.

நிகழ்ச்சி மேடையில் தனது மகள் இனியாவிற்காக நடிகை தேவயானி செய்த செயல்... நடக்குமா? | Actress Devayani Request Opportunity For Daughter

இந்த நிலையில் நடிகை தேவயானி சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியில் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு விருது கொடுத்த தேவயானி பேசும்போது, முன்பு உங்கள் அப்பா-அம்மாவிற்கு ரசிகர்களாக இருந்தோம், இப்போது உங்களுக்கு ரசிகர்களாக இருக்கிறோம், நீங்கள் மென்மேலும் வளர வேண்டும்.

நிகழ்ச்சி மேடையில் தனது மகள் இனியாவிற்காக நடிகை தேவயானி செய்த செயல்... நடக்குமா? | Actress Devayani Request Opportunity For Daughter

என் மகளும் நன்றாக பாடுவாள், அவளுக்கு உங்கள் இசையில் பாடல் பாட வேண்டும் என்பது ஆசை, வாய்ப்பு இருந்தால் அழைத்து கொடுங்கள் என கூற உடனே சாய் கண்டிப்பாக மேடம் என கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US