சினிமாவில் Adjustment கேட்ட பிரபலம், கொடுமை அனுபவித்த நடிகை தாரணி- முதன்முறையாக ஓபன் டாக்
நடிகை தாரணி
சின்னத்திரை, வெள்ளித்திரை என 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை தாரணி.
பட்ஜெட் பத்மநாபன் படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு மனைவியாக நடித்து தாரணி பெரிய ரீச் பெற்றார்.
அதன்பிறகு நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் சில வருடங்களிலேயே காணாமல் போனார். இப்போது ஒரு சில திரைப்படங்கள், சீரியல்கள் என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகையின் பேட்டி
சமீபத்தில் தனது சினிமா பயணம் குறித்தும் அதில் தான் அனுபவித்த கஷ்டங்கள் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் அவர், அப்போது ஆரம்பத்தில் தான் நடித்த இரண்டு படங்களில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அதற்குப் பிறகு ஒரு திரைப்படத்தில் நான் ஹீரோயினியாக நடித்த போது இயக்குனர் மற்றும் கேமராமேன் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டாங்க.
ஆனால் அதிலும் கேமரா மேன் தான் அதிக முறை வெளிப்படையாகவே என்னிடம் கேட்டார்.
நான் அவரிடம் தயவு செய்து தப்பா எடுத்துக்காதீங்க, நான் எப்படி சினிமாவில் வந்தேன் என்று கேட்டுட்டு வாங்க, தப்பான வழியில் நான் வந்திருந்தேனா நீங்க சொல்றத நான் செய்கிறேன் என்று சொன்னேன்.
அதன் பிறகு அவர் என்னை விட்டுவிட்டார், ஆனால் அதிகமாக சூடு இருக்கும் லைட்டை என் மீது காட்டி என்னை நடிக்கும் போது அதிகமாக கஷ்டப்படுத்தினார் என தாரணி கூறியுள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் மகளை திருமணம் செய்கிறாரா குக் வித் கோமாளி புகழ் அஸ்வின்- யார் அவர், வெளிவந்த விவரம்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
