புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கப்போகும் நடிகை தர்ஷனா? எந்த தொடர் தெரியுமா?
புதிய சீரியல்
தமிழ் சின்னத்திரையில் ஒரு நடிகரை ரசிகர்கள் ரசித்து விட்டார்கள் என்றால் அவர்கள் எது செய்தாலும் ரசிப்பார்கள்.
அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை தான் தர்ஷனா ஸ்ரீபால். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் தொடரில் வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தார்.
இந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறியவர் பின் சன் டிவி பக்கம் சென்று பூவா தலையா தொடரில் கதாநாயகியாக நடித்தார்.
புதிய தொடர்
பின் கிரிக்கெட் மைதானத்தில் சிஎஸ்கே மேட்ச் பார்க்கும் போது அவரின் புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் ஒரே நாளில் வைரலானது. இந்த நிலையில் நடிகை தர்ஷனாவின் புதிய தொடர் குறித்த தகவல் வந்துள்ளது.
அவர் சன் டிவியில் அண்மையில் தொடங்கப்பட்ட மூன்று முடிச்சு தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.
ஆனால் என்ன கதாபாத்திரம், எப்போது வருவார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.