மீண்டும் விஜய் டிவி பக்கம் வந்த சீரியல் நடிகை தர்ஷனா... எந்த தொடர் தெரியுமா?

By Yathrika Feb 18, 2026 03:30 AM GMT
Report

விஜய் டிவி

ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று பெயர் போன விஜய் டிவி இப்போதெல்லாம் சீரியல்களிலும் கெத்து காட்டி வருகிறார்கள். நாங்கள் இதிலும் கெத்து காட்டுவோம் என விதவிதமான கதைகள் கொண்ட சீரியல்களாக இறக்கி வருகிறார்கள்.

சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அய்யனார் துணை, மகாநதி, சின்ன மருமகள் என தொடர்ந்து சீரியல்களை வெற்றிகரமாக ஒளிபரப்புகிறார்கள்.

கொஞ்சம் டிஆர்பியில் சொதப்பும் தொடர்களை உடனே முடித்து புதிய சீரியல்களை அதே வேகத்தில் களமிறக்கிவிடுகிறார்கள்.

மீண்டும் விஜய் டிவி பக்கம் வந்த சீரியல் நடிகை தர்ஷனா... எந்த தொடர் தெரியுமா? | Actress Dharshna Sripal New Serial Update

புதிய சீரியல்

ஏற்கெனவே சுட்டும் விழி சுடரே, கனா கண்டேனடி போன்ற புதிய சீரியல்கள் களமிறங்கிய நிலையில் இப்போது புதிய தொடர் குறித்த தகவல் வலம் வருகிறது.

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் பிரபலமான நடிகை தர்ஷனா விஜய் டிவியின் புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம். நீ இன்றி நான்இல்லை என புதிய சீரியலுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக தகவலும் வந்துள்ளது.

மீண்டும் விஜய் டிவி பக்கம் வந்த சீரியல் நடிகை தர்ஷனா... எந்த தொடர் தெரியுமா? | Actress Dharshna Sripal New Serial Update

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US