வீர தீர சூரன் படத்தால் அடித்த ஜாக்பாட்.. பிரபல நடிகருடன் இணையும் துஷாரா விஜயன்
துஷாரா விஜயன்
தமிழ் சினிமாவில் தற்போது வளந்து வரும் நடிகைகளில் ஒருவர் துஷாரா விஜயன். இவர் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் கதாநாயகியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த படத்தை தொடர்ந்து, தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த ராயன் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்தார். இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்த துஷாராவுக்கு, ரஜினியின் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதை சரியாக பயன்படுத்தி கொண்டு அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். சமீபத்தில், விக்ரம் ஜோடியாக வீர தீர சூரன் படத்தில் நடித்தார்.
அடித்த ஜாக்பாட்
இந்நிலையில், அடுத்து துஷாரா நடிக்கப்போகும் படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி, நடிகர் விஷால் தனது நிறுவனம் மூலம், ரவி அரசு படத்தினை அவரே தயாரித்து நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் நடிக்க துஷாரா விஜயனிடம் கதை சொல்ல அவர் கதையை கேட்டுவிட்டு, சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
துஷாரா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri
