நான் சென்றால், எழுந்து நின்று கொள்வார்.. ரஜினிகாந்த் குறித்த ரகசியத்தை கூறிய ராயன் பட நடிகை துஷாரா விஜயன்
துஷாரா விஜயன்
தமிழ் சினிமாவில் தற்போது வளந்து வரும் நடிகைகளில் ஒருவர் துஷாரா விஜயன். இவர் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் கதாநாயகியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த படத்தை தொடர்ந்து, தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த ராயன் படத்தில் நடித்தார். தற்போது, வரும் அக்டோபர் 10 - ம் தேதி ரஜினி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவர இருக்கும் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நட்சத்திரங்கள் பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த நடிகை மாளவிகா மோகனன்.. என்ன கூறினார் தெரியுமா
இந்த படம் இன்னும் ஒரு சில தினங்களில் வெளிவர இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
ரஜினிகாந்த்
அந்த வகையில், இந்த படத்தின் நடிகையான துஷாரா விஜயன் பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார். அதில், "ரஜினி சார் இன்றும் சினிமா துறையில் புகழின் உச்சத்தில் இருக்க அவருடைய பணிவான குணம் ஒரு மிகப்பெரிய காரணம்.
இந்த வயதிலும் அவருடைய எனர்ஜி சான்சே இல்லை, அந்த அளவிற்கு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவர் இருப்பார். அதனை காணும்போது வியப்பாக இருக்கும்.
மேலும், அவர் நான் நடித்த 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை பாராட்டினார். அதுமட்டுமில்லாமல், என்னுடைய பேட்டிகள், வீடியோக்களை பார்த்ததாக ரஜினி சார் என்னிடம் கூறினார்.
அவர் சூப்பர் ஸ்டார் போன்று நடந்து கொள்ளாமல் மிகவும் இயல்பாக ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்து கொள்வார். ரஜினி சார் இருக்கும் பக்கம் சென்றால் கூட எழுந்து நின்று அவருக்கும் சேர் வரும்வரை நின்று கொண்டிருப்பார் அந்த அளவிற்கு அவர் ஒரு சிறந்த மனிதர் என்று கூறியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
