சன் டிவியின் எதிர்நீச்சல் 2 சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.. இவர்தானா, புகைப்படம் இதோ
எதிர்நீச்சல் 2
சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்கள் குறித்து ரசிகர்கள் சொல்லவே வேண்டாம்.
சின்னத்திரையை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் நல்ல கதையுள்ள தொடர்களுக்கு அமோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட தொடர்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் முதல் பாகம் கடந்த வருடம் முடிவடைய இப்போது 2வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
புது என்ட்ரி
விரைவில் கதையில் ஜெயிலில் இருக்கும் குணசேகரன் வெளியே வரப்போவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் கதிர் குணசேகரனாகவே மாறி அவர் ஒரு விளையாட்டு விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் கதையில் ஒரு புது என்ட்ரி வரப்போகிறது, பேரழகி சீரியல் புகழ் காயத்ரி தான் எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுக்கிறாராம்.