புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள ஈரமான ரோஜாவே 2 சீரியல் புகழ் கேப்ரியல்லா- எந்த தொலைக்காட்சி தெரியுமா?
கேப்ரியல்லா
விஜய் டிவியில் மிகவும் பரீட்சயமான முகங்களில் ஒருவர் தான் கேப்ரியல்லா.
இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலையும் வென்று இருந்தார். இந்நிகழ்ச்சி கொடுத்த பிரபலம் கடந்த 2012ம் ஆண்டு ஒளிபரப்பான 7சி என்ற சீரியலில் நடித்தார்.
பின் தனுஷின் 3 உட்பட பல படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்ட இவர் ரூ. 5 லட்சத்துடன் வீட்டைவிட்டு வெளியேறினார்.
அதன்பின் பிபி ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் ஈரமான ரோஜாவே 2 தொடரில் ஒரு முக்கிய நாயகியாக நடித்து வந்தார், தற்போது தொடரும் முடிவுக்கு வந்துவிட்டது.
புதிய தொடர்
ஈரமான ரோஜாவே 2 தொடரை முடித்த கையோடு கேப்ரியல்லா நிறைய ஊர் சுற்றி வந்தார். இந்த நிலையில் தான் நடிகை புதிய தொடரில் கமிட்டாகியுள்ள விஷயம் வெளிவந்துள்ளது.
அதாவது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரில் நந்தினி, கண்ணே கலைமானே தொடர்களில் ஹீரோவாக நடித்த ராகுல் ரவிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
விரைவில் தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
