புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது எடுத்த முடிவு, அதனால் கடும் சோகத்தில் நடிகை கௌதமி- இப்படி ஆனதே?
நடிகை கௌதமி
நடிகை கௌதமி குரு சிஷ்யன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் குறித்து மக்கள் படத்தில் நடித்தது குறித்து பேசியதை விட அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது பற்றி தான் அதிகம் பேசியுள்ளார்கள். அந்த நோயின் தாக்கத்தில் இருந்து கடுமையாக போராடி வென்றுவிட்டார்.
இப்போது மீண்டும் படங்கள் நடிப்பது, பேட்டிகள் எடுப்பது என பிஸியாக இருக்கிறார்.
ஏமாற்றப்பட்ட சொத்துக்கள்
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அசையா சொத்துக்களை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் அழகப்பன் என்கிற நபர் தனக்கு சொத்துக்களை வாங்கவும் விற்கவும் உதவியாக இருந்தார். கௌதமி, அழகப்பனை பவர் ஏஜென்டாக மாற்றியிருக்கிறார்.
இதனை பயன்படுத்தி அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது கையெழுத்துக்களைப் பயன்படுத்தி போலியான ஆவணங்களை உருவாக்கி தனது சொத்துக்களை அபகரித்துள்ளதாக கௌதமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து நடிகை கௌதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
