திடீரென மொட்டை அடித்துக்கொண்ட நடிகை காயத்ரி ரகுராம்- வைரலாகும் வீடியோ
காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம் தமிழ் சினிமாவின் முக்கிய நடன இயக்குனரான ரகுராம் அவர்களின் மகள். 2002ம் ஆண்டு வெளிவந்த சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
அதன்பின் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் படங்கள் நடித்து வந்த இவர் ஏராளமான படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.
கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனிலும் கலந்துகொண்டு பல சர்ச்சைகளில் சிக்கினார்.
குடும்ப வாழ்க்கை இவருக்கு சரியாக அமையவில்லை, கணவருடன் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.
புதிய லுக்
சினிமாவை தாண்டி இவர் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். இந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் திருப்பதி சென்று தனது தலை முடியை மொட்டை அடித்துள்ளார்.
மொட்டை அடித்ததுடன் வீடியோ வெளியிட ரசிகர்கள் காயத்ரியா இது என லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
17 வயதில் கல்யாணம், கஷ்டம், விவாகரத்து- சோகமான விஷயங்களை கூறிய நடிகை ரேகா நாயர்