வாத்தி கமிங் பாடலுக்கு கணவருடன் குத்தாட்டம் போட்ட நடிகை ஜெனிலியா, லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்.
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் 50 % இருக்கைகளுடன் வெளியான போதிலும் மிக பெரியளவில் வசூல் சாதனை செய்து சாதனை புரிந்தது, குறிப்பாக இப்படம் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படம் வெளியாகி இதனை மாதங்கள் ஆகியும் மாஸ்டர் படத்தை ரசிகர்கள் பலவிதமாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கமிங் பாடல் பல மில்லியன் கணக்கில் பார்வைகளை குவித்து வரும் நிலையில், பல தரப்பான நட்சத்திரங்களும் இதற்கு நடனமாடி வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் தற்போது தளபதி விஜய்யுடன் சச்சின், வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்களில் அவருடன் நடித்த நடிகை தான் ஜெனிலியா, தற்போது அவரின் கணவருடன் வாத்தி கமிங் பாடலுக்கு நடமாடியுள்ள வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
Vaathi comming by @geneliad
— Master Dinesh (@63dinesh64) March 13, 2021
❤️?#VaathiComing#Master #Thalapathy65 @actorvijay pic.twitter.com/u1QEf8ljx1