2வது முறையாக கர்ப்பமாக உள்ளாரா விஜய் பட பிரபல நடிகை... வீடியோவுடன் இதோ
இலியானா
விளம்பர படங்களில் நடித்து பிரபலமானதன் மூலம் நடிகையானவர் இலியானா.
கடந்த 2006ம் ஆண்டு வெளியான தேவதாசு என்ற தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் மகேஷ் பாபுவுடன் இணைந்து போக்கிரி படத்தில் நடித்தார், அப்படம் சூப்பர் ஹிட்.
அப்படியே தமிழ் பக்கம் கேடி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார்.
பாலிவுட்டிலும் ஒரு ரவுண்டு வர ஆரம்பித்தவர் தமிழ் பக்கம் அதன்பின் வரவில்லை.
குழந்தை
இவர் கடந்த 2023ம் ஆண்டு மைக்கேல் டோலன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த வருடம் மகன் பிறந்த நிலையில் மீண்டும் இலியானா கர்ப்பமாகி உள்ளார்.
நியூஇயர் ஸ்பெஷலாக வீடியோ ஒன்றை வெளியிட்டவர் அதில் இந்த ஸ்பெஷல் தகவலை வெளியிட்டுள்ளார்.