பிக்பாஸ் சென்று கல்லூரி தோழி பூர்ணிமாவை கண்டுகொள்ளாமல் வந்தது ஏன்?- நடிகை இந்துஜா ஓபன் டாக்
பிக்பாஸ் 7
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் 7.
60 நாட்களுக்கு மேல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிரதீப், தானாக வெளியேறிய பவா செல்லதுரை பின் யுகேந்திரன், வினுஷா, ஜோவிகா, அன்னபாரதி, கானா பாலா, ஐஷு உள்ளிட்டோர் தொடர்ந்து எவிட் ஆனார்கள்.
மீண்டும் வீட்டிற்குள் அனன்யா மற்றும் விஜய் வர்மா வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்தார்கள். அவ்வளவாக விறுவிறுப்பாக நிகழ்ச்சி செல்கிறது என கூற முடியாது, ஆனால் ஓரளவிற்கு செல்கிறது.
இந்துஜா-பூர்ணிமா
அண்மையில் பார்க்கிங் படத்தின் புரொமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்கள்.
பூர்ணிமா, இந்துஜாவின் கல்லூரி தோழியாம், ஆனால் வீட்டிற்குள் வந்தவர் தனது தோழியிடம் எதுவுமே பேசவில்லை.
இதனால் பூர்ணிமாவும் நிகழ்ச்சியில் ஒருவரிடம் கூறி வருத்தப்பட்டார்.
அண்மையில் ஒரு பேட்டியில் இந்துஜா பேசும்போது, பார்க்கிங் பட புரொமோஷனுக்காக தான் பிக்பாஸ் சென்றோம், எங்களுக்கு பல விதிமுறைகளை சொல்லித்தான் உள்ளே அனுப்பினார்கள்.
நானும், பூர்ணிமாவும் தோழிகள தான், 2 வருடத்திற்கு ஒருமுறை பேசுவோம். அவர் நல்ல பெண், நன்றாக விளையாடுகிறார் என இந்துஜா கூறியுள்ளார்.