சினிமாவில் அந்த விஷயத்தில் மட்டும் ரொம்ப கவனமாக இருக்கிறேன்!! ஐஸ்வர்யா மேனன் ஓபன் டாக்..
ஐஸ்வர்யா மேனன்
தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஓபன் டாக்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா மேனன் நிறைய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், "நான் நடித்த எல்லா படங்களும் ஹிட் ஆக வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.ஆனால் வெற்றி என்பது ரசிகர்களின் கையில் தான் இருக்கிறது. அவர்களுக்கு அந்த படம் பிடித்தால் தான் வெற்றி அடையும்".
"நான் கதைகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். வித்தியாசமான கதைகள் எந்த மொழியில் இருந்து கிடைத்தாலும் விடமாட்டேன். மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிப்பது நான் பாக்கியமாக கருதுகிறேன்" என்று ஐஸ்வர்யா மேனன் கூறியுள்ளார்.

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri
