பிரபல சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி கைது!! காரணம் என்ன தெரியுமா?
ஜெயலட்சுமி
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஜெயலட்சுமி. இவர் வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கைது..
சமீபத்தில் பிரபல பாடல் ஆசிரியர் சினேகன், நடிகை ஜெயலட்சுமி "சினேகம் பவுண்டேஷன்" பெயரை பயன்படுத்தி பணம் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறார்.
இதற்கு ஜெயலட்சுமி தரப்பினர், தன் மீது சினேகன் அவதூறு பரப்புவதாக புகார் அளித்து இருந்தது.
இப்படி இருவரும் மாறி மாறி புகார் அளித்து வந்த நிலையில், இன்று காவல் துறையினர் ஜெயலட்சுமியை வீட்டில் சோதனை நடத்தி வந்தார்கள். இந்நிலையில் தற்போது ஜெயலட்சுமியை கைது செய்துள்ளனர்.
You May Like This Video