ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை.. ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
ஜெயிலர் 2
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் ஜெயிலர் 2 படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ஹாப்பி நியூஸ்!
இந்நிலையில், இப்படத்தில் இந்தி நடிகை அபேக்ஷா போர்வல் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியில் 'உண்டேகி'(Undekhi), 'ஹனிமூன் போட்டோகிராஃபர்', 'ஸ்லேவ் மார்க்கெட்' ஆகிய வெப் தொடர்களில் மூலம் பிரபலமானவர் நடிகை அபேக்ஷா. இவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றன.

புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri